சுடச்சுட

  

  டேக் ஈசி-க்குப் புதிய பாடல் வரிகள் கேட்ட ரஹ்மான்: அசத்திய ‘குபீர்’ கவிஞர்கள்!

  By DIN  |   Published on : 02nd December 2016 03:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  prabhudeva11

   

  ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா, நக்மா நடித்த படம் - காதலன். இதில் இடம்பெற்ற பாடல் - டேக் ஈசி ஊர்வசி. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வைரமுத்து எழுதிய இந்தப் பாடல் அன்று மிகவும் புகழ்பெற்றது. இப்போது சமகாலத்துக்கு ஏற்றவாறு புதிய வரிகளுடன் மேடையில் பாடுவதற்காக ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் ஏ.ஆர். ரஹ்மான்.

  இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றித்தரவேண்டும். ஆனால் நடந்துமுடிந்த அமெரிக்கத் தேர்தல், ஹிலாரி கிளிண்டன், ட்ரம்ப், ரூபாய் நோட்டு விவகாரம் போன்றவற்றை முன்வைத்து வரிகள் இருக்கக்கூடாது. சுவாரசியமாக, நகைச்சுவையாக, மூலப் பாடலின் தரத்துக்கு இருக்கவேண்டும் என்று ஃபேஸ்புக்கில் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு ஆயிரக்கணக்கான பேர் பதில் அளித்திருந்தார்கள். அவற்றில் சில:

  கல்யாணம் எப்போ மாமி கேட்டா டேக் ஈசி ஊர்வசி
  கல்யாணம் ஆச்சு பேபி எப்போ, டேக் ஈசி ஊர்வசி

  டிபி மாத்தியும் லைக் வரலைன்னா டேக் ஈசி ஊர்வசி
  ஐ போன் செவன் கீழே விழுந்தா டேக் ஈசி ஊர்வசி
  கடலை நடுவில் பேட்டரி தீர்ந்தா டேக் ஈசி ஊர்வசி

  என்ஜினியரிங் படிச்சும் வேலை இல்லைனா டேக் ஈசி ஊர்வசி
  ஆன்சை ஆஃபர் வந்தும் பாஸ்போர்ட் இல்லைனா, டேக் ஈசி ஊர்வசி
  ஜியோ சிம்ல சிக்னல் இல்லைனா டேக் ஈசி ஊர்வசி
  சிக்னல் கிடைச்சும் கால் வரலைனா டேக் ஈசி ஊர்வசி
  ரெண்டாயிரம் ரூபா நோட்டு கிழிஞ்சு போச்சுனா டேக் ஈசி ஊர்வசி

  சில்லறைக்குப் பதில் மிட்டாய் தந்தா டேக் ஈசி ஊர்வசி
  பழைய காதலி பிளாக் பண்ணா டேக் ஈசி ஊர்வசி
  செல்ஃபி போட்டோ சுமாரா இருந்தா டேக் ஈசி ஊர்வசி
  ஷேர் ஆட்டோல சீட் இல்லைனா டேக் ஈசி ஊர்வசி

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai