சுடச்சுட

  

  கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி ரம்பா வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

  By DIN  |   Published on : 03rd December 2016 04:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rambha763xx

   

  மாதம்தோறும் ரூ.2.50 லட்சம் பராமரிப்புத் தொகையாக வழங்குவதற்கு, தனது கணவருக்கு உத்தரவிட கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  இலங்கையை பூர்வீகமாக கொண்ட கனடாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை 2010-ம் ஆண்டு ஏப்ரல் 8-ல் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார் நடிகை ரம்பா. கருத்துவேறுபாடு காரணமாக, 2012-ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.

  இந்த நிலையில், சென்னையில் வசித்துவரும் ரம்பா இந்து திருமணச் சட்டப்படி இணைந்து வாழ கணவருக்கு உத்தரவிடக்கோரி, சென்னை இரண்டாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தார்.

   இந்த நிலையில், மேலும் கூடுதலாக தாக்கல் செய்துள்ள மனுவில் ரம்பா கூறியிருந்ததாவது: திருமணத்துக்குப் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதில்லை. ஆகையால், எந்த வருமானம் இல்லை. மூத்த குழந்தை லான்யாவுக்கு சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஆண்டுக்கு ரூ. 3.50 லட்சம் கட்டணம் செலுத்துகிறேன். இளைய மகள் சாஷாவின் பராமரிப்பு, மருத்துவ செலவு அதிகமாக உள்ளது. கணவர் கனடாவில் மாதத்துக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 25 லட்சம் வருவாய் ஈட்டுகிறார். ஆகவே, மாதம்தோறும் ரூ.1.50 லட்சமும், இரு குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் என மொத்தம் ரூ.2.50 லட்சம் வழக்கு முடிவடையும் வரை இடைக்கால பாரமரிப்பு செலவுக்கு ( ஜீவனாம்சம்) வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

  இந்த மனு ஏற்கெனவே இருந்த வழக்குடன் இணைத்து, இன்று விசாரணைக்கு வந்தது. ரம்பா நேரில் ஆஜராகவில்லை. ரம்பா, இந்திரன் என இருவர் தரப்பும் விசாரணையை ஒத்திவைக்கும்படி கோரினார்கள். அதன்படி, வழக்கின் விசாரணை விசாரணை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai