சுடச்சுட

  
  ramya_krishnan11xx

   

  சிங்கம் 3 படத்துக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. தானா சேர்ந்த கூட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுவருகிறது. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு இசை - அனிருத். 

  இப்போது இந்தப் படக்குழுவில் மேலும் இருவர் இணைந்துள்ளார்கள். நகைச்சுவை நடிகர் செந்திலும் நடிகை ரம்யா கிருஷ்ணனும் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளார்கள். மேலும் ஆர்.ஜே. பாலாஜி, நிரோஷா ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். நானும் ரெளடிதான் படத்துக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படம் என்பதாலும் சூர்யா - விக்னேஷ் சிவன் - கீர்த்தி சுரேஷ் என்கிற புதிய கூட்டணியில் உருவாவதாலும் தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு இப்போதிருந்தே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai