சுடச்சுட

  

  பாகுபலி- 2 ல் நடிக்க மறுத்தாரா பழம்பெரும் நடிகை காஞ்சனா?!

  By Karthiga Vasudevan  |   Published on : 03rd December 2016 03:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  maxresdefault

  பழம்பெரும் நடிகை காஞ்சனாவை நினைவிருக்கிறதா? காதலிக்க நேரமில்லை, சாந்தி நிலையம், சிவந்த மண் உள்ளிட்ட அந்நாளைய பிளாக் பஸ்டர் படங்களின் நாயகி. காஞ்சனாவுக்கு இப்போதும் 60 களில் தனி ரசிகர் கூட்டம் உண்டு என்பதெல்லாம் சொல்லித் தெரியவேண்டிய செய்தியில்லை. அவரைப் பற்றி இப்போதென்ன புதுச்செய்தி என்றால் சரித்திரப் புகழ் பாகுபலி- 2 ல் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கச் சொல்லி காஞ்சனாவை அப்படத்தின் இயக்குநர் எஸ்.எஸ். ராஜ மெளலி அணுகினார். காஞ்சனாவுக்கும் ராஜமெளலி இயக்கத்தில் அதிலும் வசூலில் பட்டையைக் கிளப்பிய படமான பாகுபலியின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தான். அவருக்கு கொடுக்கப் பட்ட கதாபாத்திரம் குரூரம் கலந்த வில்லத்தனத்துடன் இருந்தது கூட காஞ்சனாவுக்குப் பிரச்சினையில்லை. ஆனால் படப்பிடிப்புக்காக காஞ்சனா ஜோத்பூர் செல்ல வேண்டி இருந்தது. ஜோத்பூரில் தற்போது நிலவும் சீதோஷ்ணம் காஞ்சனாவுக்கு ஒத்துக் கொள்ளாததால் அவர் ராஜமெளலியின் பாகுபலி- 2 ல் நடிக்க முடியாமல் திரும்பி விட்டாராம். 

  பல வருடங்களாக திரையுலகில் இருந்தும், நடிப்பிலிருந்தும் ஒதுங்கி இருந்த நடிகை காஞ்சனா சமீபத்தில் தான்  தெலுகு சினிமாவான ‘அர்ஜூன் ரெட்டி’ மூலமாக தனது கலை உலக மறு பிரவேஷத்தைத் தொடங்கி இருந்தார். விரைவில் அவர் தமிழ் சினிமாக்களிலும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்டோருக்குப் பாட்டியாகத் தோன்றுவார் என எதிர்பார்க்கலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai