சுடச்சுட

  

  சந்தானம்- செல்வராகவன் இணையும் புதிய படம்: பூஜையுடன் தொடங்கியது!

  By DIN  |   Published on : 04th December 2016 04:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  selva-santhanam-crop

   

  சென்னை:  இயக்குனர் செல்வராகவன் - நடிகர் சந்தானம் முதன் முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

  எஸ்.ஜெ .சூர்யா, நந்திதா நடிப்பில், இயக்குனர் செல்வராகவன் உருவாக்கியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் தற்போது முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் சந்தானத்தை வைத்து நகைச்சுவை கலந்த காதல் படத்தை செல்ராகவன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

  இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. சந்தானமும், செல்வராகவனும் சேர்ந்து நிற்பது போன்ற புகைப்படத்தை இருவரும் தத்தமது டிவிட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

  மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கதாநாயகி யார் என்று படக்குழுவினர் இன்னும் முடிவெடுக்கவில்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai