சுடச்சுட

  
  Remo982_(6)

   

  சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆர்.டி. ராஜா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம், இசை - அனிருத். 

  சமீபத்தில் வெளியான ரெமோ, வசூலில் சாதனை நிகழ்த்தியது. முதல் நாளிலேயே ரூ. 8 கோடி வரை வசூல் செய்தது. சிவகார்த்திகேயன் படங்களில் அதிக வசூல் கண்டது ரெமோதான். இந்நிலையில் இந்தப் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கும் வெற்றிகண்டது. 

  ரெமோ, தெலுங்கிலும் வெற்றி பெற்றது குறித்து அதன் தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா தெரிவித்ததாவது: 

  ரெமோ படத்துக்குக் கிடைத்த வசூல் மூலம் தெலுங்குத் திரையுலகின் பெரிய நட்சத்திரக் கூட்டத்தில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். வெளியான அனைத்து திரையரங்கிலும் நல்ல வசூல் கிடைத்துள்ளது. இதற்குக் கிடைத்த வரவேற்பு இதர படங்களுக்கு முன்னுதாரணமாக அமையும். பணத்தட்டுப்பாடு சமயத்திலும் வசூலில் ஏறுமுகமாக உள்ளது. அதே நாளில் வெளியான மற்ற படங்களை விடவும் அதிக வசூலைப் பெற்றுள்ளது என்று கூறினார்.

  மேலும் தெலுங்குப் பட வெற்றி குறித்து ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், இந்தியில் ரீமேக் செய்ய பேசப்பட்டுவருகிறது. ஆர். டி. ராஜாவே ஹிந்தியிலும் தயாரிப்பார் என்று கூறினார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai