சுடச்சுட

  
  Bollywood-Actor-Shah-Rukh-Khan1

   

  தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதையடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.

  ரஜினி: தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது. மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  அமிதாப் பச்சன்: இந்தியத் திரையுலகின் நூற்றாண்டு விழாவை எல்லா மொழிகளுக்கும் கொண்டாடிய முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. மிகவும் மதிப்பு வாய்ந்தவர்.

  ஷாருக் கான்: ஜெயலலிதா அவர்களின் மரணம் வருத்தத்தை அளிக்கிறது. அவர் ஆன்மா சாந்தியடையட்டும். 

  த்ரிஷா: எனக்கு மிகவும் பிடித்தமானவர். அவர் படித்த பள்ளியில் நானும் படித்தேன் என்பது எனக்குப் பெருமிதமானது. 

  சிவகார்த்திகேயன்: மிகவும் வருத்தமாக இருக்கிறேன். நிகரில்லாப் பெண்மணி. இரும்பு மனிதர். 

  சுஹாசினி: உடைந்துபோயிருக்கிறேன். இதயம் நொறுங்கியுள்ளது. வருத்தத்தைக் கண்ணீரால் விளக்கமுடியாது. மிகவும் வருத்தமாக உள்ளேன்.

  விக்ரம் பிரபு: மிகவும் சக்திமிக்க தலைவர். அம்மாவாக வாழ்ந்தவர்.  அவரை நாம் இழந்துவிட்டோம். 

  இயக்குநர் வெற்றிமாறன்: மிகவும் வருத்தமாக உள்ளது. அவர் ஆன்மா சாந்தியடையட்டும். 

  ஆர்ஜே பாலாஜி: என் அம்மா அழுகிறார். என் குடும்பத்தில் ஒருவரை இழந்ததுபோல உள்ளது. பலரும் அப்படித்தான் எண்ணுகிறோம். இன்னொரு அம்மா கிடையாது. அவரை இழந்து வாடுகிறோம்.

  அனுஷ்கா: ஆழ்ந்த வருத்தங்கள்.

  ரித்திகா சிங்: அதிர்ச்சியாகியுள்ளேன். இந்தச் செய்தியைக் கேட்டதில் இருந்து வருத்தமாக உள்ளேன்.

  நிவேதா பெத்துராஜ்: அவர் ஒரு ராணி.  தன் ஆட்சியின் ஒவ்வொரு தருணத்தையும் தன் வசம் வைத்திருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai