சுடச்சுட

  

  உடல்நலக்குறைவால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டேனா? கவிஞர் வைரமுத்து விளக்கம்!

  By DIN  |   Published on : 07th December 2016 11:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  VAIRAMUTHU

   

  கவிஞர் வைரமுத்து உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். 

  வணக்கம். ஒவ்வோர் ஆண்டும் நான் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனை செய்து கொண்டேன்.

  நான் முழு உடல் நலத்தோடு 
  இருப்பதாக அப்போலோ மருத்துவக் குறிப்பு தெரிவிக்கிறது.
  பரபரப்பான செய்திகள் பரப்ப வேண்டாம்.

  என் மீது தான் எவ்வளவு அன்பு. அக்கறைகொண்டு விசாரித்த அனைவருக்கும் நன்றி.

  ஊடகங்களுக்கு என் வணக்கம் 

  என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai