சுடச்சுட

  

  தவறு செய்யும்போது கடுமையாக விமரிசிப்பார்: சோ மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்!

  By DIN  |   Published on : 07th December 2016 02:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cho_Ramasamy_death_(6)_(1)

   

  பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வழக்குரைஞர் போன்ற பல துறைகளில் பன்முகத் தன்மை கொண்ட பண்பாளர் சோ ராமசாமி (82) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று அதிகாலை 3.58 மணிக்கு காலமானார்.

  சோ - இந்த ஒற்றை வார்த்தைக்குப்பின் அடுக்கடுக்காகப் பல படிமங்கள் தொகுத்து நிற்கின்றன. வழக்கறிஞராக, நாடகவியலாளராக, திரைப்பட நடிகராக, விமரிசகராக, பத்திரிகையாளராக என நீண்டு கொண்டே போகின்றன. தனக்கென தனியொரு பாணி வகுத்தவர். மனத்துக்குப் பிடித்தோரை கண்முடித்தனமாகப் பின்பற்றும் இன்றைய அரசியல் சூழலில், தான் ஆதரித்தோர் தவறுசெய்யும்போது கடுமையாக விமரிசித்தும், விமரிசிக்கப்பட்டவர் சரியானதொரு காரியம் செய்யும்போது பெருமனதோடு ஆதரிப்பதும்.... பத்திரிகையாளராக அவருடைய முதிர்ச்சி பாராட்டுக்குரியது, பின்பற்றக்கூடியது. அவரை இழந்துவாடும், உற்றத்தார், சுற்றத்தார், நாடகம், திரைப்படம் சார்ந்தோர், பத்திரிகையாளர் அனைவரோடும் தென்னிந்திய நடிகர் சங்கம் அவரைப் பிரிந்த துக்கத்தில் பங்கு கொள்கிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai