சுடச்சுட

  

  சர்வதேச திரைப்பட விழாவில் அதிக அளவில் பெண் இயக்குநர்களின் படங்கள்

  By DIN  |   Published on : 08th December 2016 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கேரள சர்வதேச திரைப்பட விழாவில் முதல் முறையாக பெண் இயக்குநர்களின் திரைப்படங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன.
  கேரள சர்வதேச திரைப்பட விழா, கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில், வரும் 9-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
  இதில், அந்த மாநிலத்தைச் சேர்ந்த பெண் இயக்குநர் விது வின்சென்ட் இயக்கியுள்ள "மேன்ஹோல்' என்ற திரைப்படமும், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த நாடக நடிகை சந்த்வானா பர்டோலாய் இயக்கி, தயாரித்துள்ள "மிட்நைட் கெடகி' என்ற திரைப்படமும், துருக்கியைச் சேர்ந்த இயக்குநரான யெஸிம் உஸ்தாவ்க்ளு இயக்கியுள்ள "கிளேயர் அப்ஸ்கியூர்' என்ற திரைப்படமும் இடம்பெறவுள்ளன.
  இதில், "மேன்ஹோல்' திரைப்படம், ரவிக்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர், தனது மூதாதையர்களைப் பற்றி எழுதியிருக்கும் கதையைத் தழுவி விது வின்சென்ட் இயக்கியிருக்கும் திரைப்படமாகும்.
  இந்தத் திரைப்படம், மலக் கழிவு குழிக்குள் இறங்கி கழிவுகளை அகற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் பிரச்னைகளை விவாதிக்கிறது.
  இந்தத் திரைப்படத்தின் மூலம், கேரள சர்வதேசத் திரைப்பட விழாவில் நடைபெறும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் முதல் கேரள பெண் இயக்குநர் என்ற பெருமையை விது வின்சென்ட் பெற்றுள்ளார்.
  இதுதவிர, அனன்யா காசரவல்லி, சுமித்ரா பவே, லீனா யாதவ் போன்ற இந்தியப் பெண் இயக்குர்களின் திரைப்படங்களும் திரைப்பட விழாவில் இடம்பெறவுள்ளன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai