சுடச்சுட

  

  பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

  By DIN  |   Published on : 10th December 2016 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rajini

  வரும் 12 -ஆம் தேதி (திங்கள்கிழமை) தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  இதுகுறித்த அறிவிப்பை தனது ரசிகர் மன்ற தலைமையகம் மூலம் மாவட்ட மன்ற நிர்வாக தலைமைக்கு ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ளார்.
  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை (டிச.5) காலமானார். அவரை தொடர்ந்து, ரஜினியின் நட்பு வட்டத்தில் முக்கியமானவராக கருதப்படும் பத்திரிகையாளர் சோ புதன்கிழமை (டிச.7) மறைந்தார்.
  இதையடுத்து, தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று தனது ரசிகர்களை ரஜினி கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
  அத்துடன் பிறந்த நாளையொட்டி போஸ்டர்கள் மற்றும் கட் -அவுட்டுகள் எதையும் வைக்க வேண்டாம் என்றும், தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்றும் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai