சுடச்சுட

    

    கூடுதல் கட்டணம் விவகாரம்: சிங்கம் 3 படத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

    By DIN  |   Published on : 14th December 2016 12:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    singam3

     

    ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சிங்கம் 3 படத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

    இதற்கு முன்பு வெளிவந்த இரு பாகங்களும் வெற்றி பெற்றதால் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள எஸ் 3 (சிங்கம் 3) படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா போன்றோர் நடித்துள்ளார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 

    இந்நிலையில், இப்படத்துக்கு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால் இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

    இதையடுத்து, தமிழக அரசு, படத்தயாரிப்பாளர் ஆகியோர் பதிலளிக்கும்படி கூறிய உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை டிசம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai