சுடச்சுட

  
  WhatsApp_Image_2016-12-10_at_12

   

  ஏழு வருடங்களுக்கு முன் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த படம் - சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு. இப்படத்தின் மூலமாக விஷ்ணு விஷால், சூரி, அப்பு குட்டி போன்ற திறமையான நடிகர்கள் அறிமுகமானார்கள். மறுபடியும் கபடியை மையமாகக் கொண்டு வெண்ணிலா கபடி குழு -2 தயாராகிறது. 

  இப்படத்தை சுசீந்திரன் வழங்க சாய் அற்புதம் சினிமாஸ் தயாரிக்கிறது. விக்ராந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அர்த்தனா என்கிற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். பசுபதி, கிஷோர், சூரி, ரவி மரியா, யோகி பாபு, அப்பு குட்டி போன்றோரும் நடிக்கிறார்கள். 

  கதை – திரைக்கதை – வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் செல்வ சேகரன். மூலக்கதை: சுசீந்திரன்; இசை: செல்வகணேஷ். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தவாரம் ஆரம்பமானது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai