சுடச்சுட

  

  "சிங்கம் 3'-க்கு கூடுதல் கட்டணம் வசூலைத் தடுக்க மனு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

  By DIN  |   Published on : 15th December 2016 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Singam3

  "சிங்கம் 3' படத்துக்கு திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  இதுதொடர்பாக சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது:-
  நடிகர் சூர்யா நடித்த "சிங்கம்- 3' என்ற திரைப்படம் டிசம்பர் 23-ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு மே 20-இல், திரையரங்குகளில் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்த திருத்திய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இருப்பினும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக திரையரங்கு உரிமையாளர்கள் கட்டணம் வசூலித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் நடித்து வெளிவரும் புதிய படங்களுக்கு பலமடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.
  அரசு மற்றும் பொதுமக்களை ஏமாற்றும் வகையில், புதிய படங்களின் கட்டணச் சீட்டில் திரையரங்கு பெயர், கட்டணத்தை குறிப்பிடுவதில்லை.
  இதுகுறித்து பல முறை புகார் மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை உத்தரவிட கோரியிருந்தார்.
  இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசு உள்ளிட்ட எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai