சுடச்சுட

  

  தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்தார் நடிகர் விவேக்

  By DIN  |   Published on : 15th December 2016 02:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vivekh1

   

  சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பன்னீர் செல்வத்தை நடிகர் விவேக் இன்று சந்தித்தார். 

  இதன்பிறகு அவர் பேட்டியளித்ததாவது:

  புயலால் சென்னையில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் வீழ்ந்துள்ளன. எனவே, வெளிநாட்டு மரங்களுக்குப் பதிலாக நம் மண்ணுக்கான மரங்களை நடவேண்டும். புயலுக்கு ஆல மரம், வெளிநாட்டு வாகை மரம் தாக்குப்பிடிக்கவில்லை. அரச மரம், முருங்கை மரம் போன்றவை தாக்குப்பிடித்தன. ராஜமுந்திரியில் இருந்து மரங்களைப் பெயர்த்துக் கொண்டுவந்து இங்கு நடவேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினேன் என்று அவர் பேட்டியளித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai