சுடச்சுட

  

  ஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேறியது வெற்றிமாறனின் விசாரணை!

  By DIN  |   Published on : 16th December 2016 12:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Visaranai1

   

  வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாக பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவுக்காக இத்திரைப்படம், இந்தியாவில் இருந்து அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. இந்நிலையில் அந்தப் படம் ஆஸ்கருக்கான போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.  

  கோவை ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமார் எழுதிய "லாக்கப்' என்ற நாவலைத் தழுவி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய "விசாரணை' திரைப்படம், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. தேசிய விருதுகள் என இந்திய அளவிலும் இப்படம் அங்கீகாரம் பெற்றது. வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையையும் இத்திரைப்படம் பெற்றது. இந்நிலையில் இன்னொரு சிறப்பை பெறும் வகையில் ஆஸ்கர் விருதுக்கு இந்திய அரசின் சார்பில் இத்திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடக்கவுள்ள 89-ஆவது ஆஸ்கரில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படப் பிரிவில் இப்படம் போட்டியிட்டது. இந்திய மொழிகளில் வெளியான 29 படங்கள் அடங்கிய பட்டியலில் இருந்து விசாரணை படம் இறுதி செய்யப்பட்டது. அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்டோர் நடித்து வெளியான இப்படம், நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த படமாகும். இப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட்டது.

  இந்நிலையில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விசாரணை படம் தற்போது ஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. ஆஸ்கர் விருதுக்கான 9 படங்கள் அடங்கிய முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விசாரணை படம் இடம்பெறவில்லை. இந்த 9 படங்களில் இருந்து 5 படங்கள் இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai