சுடச்சுட

  
  nirmala-seetharaman

  சென்னை சங்கீத வித்வத் சபையின் 90 -ஆவது ஆண்டு இசை விழாவில் வியாழக்கிழமை வயலின் கலைஞர் கன்யாகுமரிக்கு 'சங்கீத கலாநிதி' விருதை வழங்குகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். உடன் கர்நாடக இசைக் கலைஞர் சு

   

  மார்கழி என்றாலே நினைவுக்கு வருவது சென்னைதான் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
  சென்னை மியூசிக் அகாதெமியின் 90-ஆம் ஆண்டு இசைத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவஞ்சலி செலுத்திய பிறகு, நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
  பாரம்பரியம், கலாசாரம், இசை, மொழி உள்ளிட்ட விஷயங்களில் தமிழகம் சிறப்புடன் திகழ்கிறது. பல்வேறு புகழ்பெற்ற இசை மாமேதைகள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு ஊக்கம் அளித்தோடு, தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
  இதன்மூலம், இசைக் கலைஞர்களுக்கு தமிழகம் சிறந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. அதுபோல், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட இதர மாநிலங்களைச் சார்ந்த பல்வேறு இசைக்கலைஞர்களை வளர்த்த இடமாக உள்ளது.
  அந்த வகையில், கர்நாடக இசை மாமேதை தியாகராஜரின் 250-ஆவது விழா கொண்டாடப்பட உள்ளது. அதுபோல், கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரம் புகழ்பெற்றது.
  அதனை கேட்போர் யாவருக்கும் கண்களில் நீர் வழியும். அதுபோல், உ.வே.சா.வின் இசையைவிட தமிழ் பற்று கொண்டு தமிழுக்கு தொண்டாற்றிய விதம் மிகவும் சிறப்புடையது.
  இவர்கள், இசையை வளர்த்ததோடு, தமிழையையும் சேர்த்தே வளர்த்துள்ளனர். இன்றளவும், இவை இரண்டையும் சேர்த்து வளர்ப்பதில் மியூசிக் அகாதெமிக்கு பங்குண்டு. அதன்மூலம், இசையோடு தமிழை உலகளவில் எடுத்óது சென்றுள்ளது என்றால் மிகையாகாது.
  எனவே, மார்கழி என்றாலே நினைவுக்கு வருவது சென்னைதான் என்றார் அவர்.
  விழாவில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், பிரபல வயலின் இசைக் கலைஞர் கன்யாகுமரி, சென்னை மியூசிக் அகாதெமி தலைவர் என்.முரளி, கர்நாடக இசைக்கலைஞர் சுதா ரகுநாதன், பாஜக மாநிலச் செயலர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai