சுடச்சுட

  
  rajini32

   

  அமீர் கான் நடித்துள்ள டங்கல் படம் டிசம்பர் 23 அன்று வெளிவருகிறது. இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் அமீர் கானுக்கு ரஜினி டப்பிங் கொடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அமீரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார் ரஜினி. ஏன்? அமீர் கான் இதற்குப் பதில் அளிக்கிறார்: 

  இந்தப் படம் தமிழ், தெலுங்கில் டப் ஆகியுள்ளது. தமிழில் எனக்கு ரஜினி டப்பிங் செய்யவேண்டும் என்று அவரிடம் பேசினேன். அவரும் படம் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால் இருவரும் விவாதித்தபிறகு ஒன்று புரிந்தது, அவருடைய குரல் அனைவருக்கும் பரிச்சயமானது. என் முகத்துக்கு அவர் குரல் சரியாக இருக்காது. எனவே அவர் டப்பிங் செய்வது சரியல்ல என்று முடிவு எடுத்தோம் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai