சுடச்சுட

  

  உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படப்பிடிப்பு தடுத்து நிறுத்தம்

  By DIN  |   Published on : 17th December 2016 10:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  flim

  வேலப்பர் கோயில் பகுதியில் வெள்ளிக்கிழமை படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்படாததால் திரும்பிச் செல்லும் உதயநிதி ஸ்டாலின்.

   

  ஆண்டிபட்டி அருகே வேலப்பர் கோயில் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படப்பிடிப்பை, இந்து சமய அறநிலையத் துறையினர் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினர்.

  உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் பொதுவாக என் மனசு தங்கம் என்ற படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

  இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஆண்டிபட்டி அருகே வேலப்பர் கோயில் பகுதியில் படிப்பிடிப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதையறிந்த இந்துசமய அறநிலையத் துறையினர், படப்பிடிப்புக் குழுவினரிடம் சென்று படப்பிடிப்பு நடத்துவதற்கான அரசு வழங்கிய அனுமதியை கேட்டனர். ஆனால், படப்பிடிப்புக் குழுவினர் அரசு அனுமதி பெறவில்லை. எனவே, அனுமதி வாங்கிய பின் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளுங்கள் எனக் கூறி அறநிலையத் துறையினர், அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.

  இதனால் படப்பிடிப்புக்காக தயாராகி வந்த உதயநிதி ஸ்டாலின், கதாநாயகி நிவேதா ஆகியோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai