சுடச்சுட

  
  AAMIR

   

  மத்திய அரசின் கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கையை நடிகர் அமீர் கான் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது: 

  நான் பொய் கூறவில்லை. கருப்புப் பணத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை என்னைப் பாதிக்கவில்லை. கருப்புப் பணம் வைத்திருப்பவர்களைத்தான் இது அதிகம் பாதித்துள்ளது. என்னிடம் கருப்புப் பணம் கிடையாது. இன்றுவரை வருமானவரி செலுத்திவருகிறேன். என்னிடம் எந்தவொரு கருப்புப் பணமும் கிடையாது. 

  கிரெடிட் கார்டு அல்லது காசோலை வழியாக நான் பணம் செலவழிக்கிறேன். மக்கள் இதனால் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள் என்பதும் தெரியும். அவர்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன். அதேசமயம் கருப்புப் பணத்தை ஒழிக்க நம் பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கு நாம் ஆதரவளிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai