சுடச்சுட

  

  பாகுபலி படத்தில் நடிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்: தமன்னா

  By DIN  |   Published on : 17th December 2016 04:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tamanna111

   

  பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.

   ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்தவருடம் ஏப்ரல் 28 அன்று படம் வெளிவருகிறது. கோடைக்கால விடுமுறை சமயத்தில் படம் வெளிவருவதால் முதல் பாகத்தை விடவும் அதிகம் வசூலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

  இந்நிலையில் இந்தப் படத்தில் நடிப்பது குறித்து தமன்னா கூறியதாவது:

  இந்தத் துறையில் என் நிலைமை சரியில்லாத சமயத்தில் பாகுபலி பட வாய்ப்பு வந்தது. பல தோல்விகளுக்குப் பிறகு பாகுபலி போன்ற ஒரு படத்தில் நடித்தது கனவு மாதிரி உள்ளது. என் திரைத்துறை வாழ்க்கையில் இது எதிர்பாராத தருணம்.

  இரண்டாவது பாகத்தில் என் கதாபாத்திரம் இன்னும் நன்றாக இருக்கும். சில சிறிய காட்சிகளைப் படமாக்கப்படவேண்டியிருக்கிறது. இந்த மாதத்துடன் படப்பிடிப்பு நிறைவுபெறும். பாகுபலி படத்தில் நடிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதற்காக உயிரை விடவும், உயிரை எடுக்கவும் கூட தயார் என்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai