சுடச்சுட

  
  saithanxx11

   

  இதுவரை சொந்தப் படங்களில் மட்டுமே நடித்துவந்த விஜய் ஆண்டனி, முதல்முறையாக மற்றொரு தயாரிப்பாளரின் படத்தில் நடிக்கிறார். நடிகை ராதிகாவின் ரேடன் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் விஜய் ஆண்டனி. 

  15 வருடங்களுக்கு முன்பு, ராதிகா மேடம்தான் என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். இப்போது அவர் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிப்பது எனக்குப் பெருமை. அடுத்தவருடம் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று விஜய் ஆண்டனி பேட்டியளித்துள்ளார். 

  ராதிகா தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகவுள்ளது. சைத்தான் படத்துக்கு அடுத்ததாக விஜய் ஆண்டனி நடிப்பில் எமன் என்கிற படம் வெளிவரவுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai