சுடச்சுட

  
  simbu+santhanam

   

  சென்னை: நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கவுள்ள ‘சக்கைபோடு போடு ராஜா’ என்ற படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைக்க உள்ளார்.

  நடிகர் சிம்புவால் திரை உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நகைச்சுவை நடிகர் சந்தானம். சிம்புவின் ‘மன்மதன்’ படத்தில்தான் சந்தானம் காமெடியனாக தன் திரை பயணத்தை தொடங்கினார்.

  அதன்பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வந்த சந்தானம் 'கண்ணா லட்டு தின்னா ஆசையா?' படம் மூலம் கதாநாயகனாகவும் ப்ரோமோஷன் பெற்றார்.

  தற்போது அவர் ‘சக்கைபோடு போடு ராஜா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்குகிறார். இப்படத்தில் சந்தானத்துடன் விவேக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ள வைபவி சாந்தலியா நடிக்கிறார். இவர்களுடன் விடிவி கணேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

  இந்த படத்தில்தான் சிம்பு இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். நடிகர் சிம்பு ஏற்கெனவே, நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரங்கள் எடுத்திருக்கிறார். இசையமைப்பாளராக அவதாரம் எடுப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai