சுடச்சுட

  

  உலக அழகிப் போட்டியில் பங்கேற்ற இந்தியப் பெண்! (படங்கள் & வீடியோ)

  By DIN  |   Published on : 19th December 2016 02:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  missindia_10101

   

  கடந்த ஏப்ரம் மாதம் மிஸ் இந்தியா வேர்ல்டு பட்டத்தைப் பெற்றார் ப்ரியதர்ஷிணி சேட்டர்ஜி. அப்போதே இவர்மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் உலக அழகிப் போட்டியில் தோல்வியடைந்துள்ளார் ப்ரியதர்ஷிணி.

  அமெரிக்காவில் நடைபெற்ற 66-வது உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்றில் 19 வயது ஸ்டெபானி வென்றுள்ளார். இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ப்ரியதர்ஷினி சேட்டர்ஜி முதல் 20 இடங்களில் வந்தாலும் அடுத்தடுத்த சுற்றுகளில் தோல்வியடைந்தார். இந்தப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து அழகிகள் கலந்துகொண்டார்கள். 

  அஸ்ஸாமைச் சேர்ந்த ப்ரியதர்ஷிணி, தில்லியில் வசித்துவருகிறார். வடகிழக்குப் பகுதியிலிருந்து உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்ட முதல் பெண் என்கிற பெருமை இவருக்கு உண்டு.

  9 வயதில், குடலில் கட்டி இருந்ததற்காக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டார். உயிர் பிழைப்பதே கடினம் என்கிற நிலைமையிலிருந்து மீண்டுவந்தார். முதலில் மிஸ் தில்லி பட்டத்தை வென்று பிறகு மிஸ் இந்தியா பட்டத்துடன் உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்டார். 

  கடந்த 66 வருடங்களில் 5 இந்தியர்கள் உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளார்கள்.

   

   

   

   

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai