சுடச்சுட

  
  lorance

  திருமலை ஏழுமலையானை தரிசித்துவிட்டு குடும்பத்தினருடன் வெளியில் வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்.

  ஏழுமலையானை நடிகர் ராகவா லாரன்ஸ் திங்கள்கிழமை வழிபட்டார்.
  ஏழுமலையானை வழிபட நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு திருமலைக்கு வந்தார். இரவு அங்கு தங்கிய அவர், திங்கள்கிழமை காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டார். தரிசனம் முடித்து திரும்பி வந்த அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பிரசாதங்களை வழங்கினர்.
  பின்னர் கோயிலை விட்டு வெளியில் வந்த அவர் கூறியதாவது:
  இயக்குநர் பி.வாசு இயக்கும் சிவலிங்கம் படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. காஞ்சனா-3 படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கிய அம்மா உணவகம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. என் அம்மாவுக்காக கட்டி வரும் கோயிலின் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது என்றார்.
  கோயில் முன் ராகவா லாரன்ஸை காண ரசிகர்கள் கூட்டம் கூடியது. இதனால் கோயில் முன் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உடனே போலீஸார் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai