சுடச்சுட

  
  Bairavaa781

   

  பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் அன்று வெளியாகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். பைரவா பாடல்கள் டிசம்பர் 23 அன்று வெளிவருகிறது. 

  பாடல் வெளியீட்டு விழா எதுவுமின்றி பாடல்கள் வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து படத்தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்‌ஷன்ஸ் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்: 

  ஜெயலலிதாவை எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகக் கருதுகிறோம். எங்கள் நிறுவனம் தயாரித்த நம் நாடு படத்தில் அவர் நடித்துள்ளார். எனவே இந்தத் துக்கமான தருணத்தில் பாடல் வெளியீட்டு விழா நடத்துவது சரியாக இருக்காது. எங்கள் படத்தின் நாயகன் விஜய்யும் அவ்வாறே கருதினார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai