சுடச்சுட

  

  சர்ச்சைக்குள்ளான கரீனா கபூரின் குழந்தைப் பெயர்: ஆதரவளித்த அரசியல்வாதி!

  By DIN  |   Published on : 21st December 2016 04:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kareena9191919191

   

  நடிகை கரீனா கபூருக்கு நேற்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

  2012-ம் வருடம் நடிகர் சயிஃப் அலி கானைத் திருமணம் செய்தார் நடிகை கரீனா கபூர். இந்த நட்சத்திர தம்பதிக்குத் நேற்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு தைமூர் அலி கான் பட்டோடி என்று பெயர் வைக்கப்பட்டது.

  இந்த அறிவிப்பு சமூகவலைத்தளத்தில் வெளியானவுடன் சர்ச்சை நிலவியது. 14-ம் நூற்றாண்டில் இந்தியாவின்மீது படையெடுத்த மங்கோலிய அரசரான தைமூரின் பெயரை வைத்தது குறித்து பலரும் விமரிசனம் செய்தார்கள். 

  இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, கரீனா கபூர் - சயிஃப் அலி கானுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஒரு குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று முடிவு செய்யும் உரிமை பெற்றோருக்கு மட்டுமே உண்டு. மற்றவர்களின் கருத்து அவசியமற்றது என்று கூறி குழந்தைக்குத் தன் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai