சுடச்சுட

  
  samantha10xx

   

  மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு மகாநதி என்கிற பெயரில் தெலுங்குப் படமாக உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்தில் சமந்தா நடிக்கிறார்.

  இதையடுத்து சாவித்திரி வேடத்தில் சமந்தா நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், படக்குழு இத்தகவலை மறுத்துள்ளது. 

  இப்படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் சாவித்திரி வேடத்தில் அவர் நடிக்கவில்லை. அதற்குப் பதிலாகப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் பார்வை வழியாக சாவித்திரியின் வாழ்க்கை சொல்லப்படும். சாவித்திரி வேடத்தில் நடிக்கக்கூடிய நடிகை இன்னமும் தேர்வு செய்யப்படவில்லை என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்தார்கள். 

  சாவித்திரி வேடத்தில் நடிக்க நித்யா மேனன், வித்யா பாலன் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அடுத்தவருடத் தொடக்கத்தில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். பிப்ரவரியில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai