சுடச்சுட

  

  நடிகை பாவனாவுக்கு ஏப்ரலில் திருமணமா? தாயார் மறுப்பு!

  By DIN  |   Published on : 21st December 2016 04:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  bhavana2xx

   

  தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை பாவனா, கன்னடத் திரைத்துறைத் தயாரிப்பாளர் நவீனைக் கடந்த 4 வருடங்களாகக் காதலித்துவருகிறார். 2017-ல் பாவனா திருமணம் செய்துகொள்ளவுள்ளார் என்று வெளியான செய்திகளை அவருடைய தாயார் மறுத்துள்ளார். 

  திருமணத் தேதி குறித்து இன்னும் முடிவாகவில்லை. ஆனால் அடுத்த வருடம் ஏப்ரலில் திருமணம் நடக்கவுள்ளதாக வெளியான செய்திகள் வேடிக்கையாக உள்ளன. நாங்கள்தான் தேதிகளை அறிவிப்போம். சரியான நேரத்தில் அதை அறிவிப்போம். திருமணத்துக்குப் பிறகு நடிப்பது குறித்து பாவனா தான் முடிவெடுக்கவேண்டும். இதுபற்றி நான் கருத்து கூறமுடியாது என்று கூறியுள்ளார்.

  ஹனிபீ, சார்லி பட ரீமேக் என இரு கன்னடப் படங்களில் நடித்துவருகிறார் பாவனா. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai