சுடச்சுட

  
  kathi_sandai3

   

  இந்த வாரம் வெள்ளியன்று 3 தமிழ்ப்படங்கள் வெளியாகின்றன.

  சுராஜ் இயக்கத்தில் விஷால், வடிவேலு, தமன்னா நடித்த கத்திசண்டையும் சசிகுமார் நடிப்பில் வெளியாகும் பலே வெள்ளையத் தேவாவும் அஸ்வின் சேகர் நடிப்பில் மணல் கயிறு பாகம் 2-ம் வெளியாகின்றன. நகைச்சுவை நட்சத்திரங்களான வடிவேலுவும் கோவை சரளாவும் முறையே கத்திசண்டை, பலே வெள்ளையத் தேவா படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். 

  கத்தி சண்டை, வடிவேலு மீண்டும் நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் படம் என்பதால் இதற்குத் தனி எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் பொங்கல் சமயத்தில் வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், டிசம்பர் 23 அன்று வெளிவருவதாக சிங்கம் 3 படம் அடுத்த மாதம் வெளியாவதால் கத்தி சண்டையின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

  1982-ம் ஆண்டு விசுவின் திரைக்கதை, இயக்கத்தில் வெளிவந்து அமோக வெற்றிப் பெற்ற படம் "மணல் கயிறு.' சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளிவருகிறது. திருமணம் குறித்த எதிர்பார்ப்புகள் எல்லோருக்குமானது. குறிப்பாக பெண்கள் தங்களது திருமண வாழ்க்கை குறித்து நிறைய திட்டங்களை வைத்துள்ள காலக் கட்டம் இது. இதை முன்னிறுத்தும் வகையில், ஒரு பெண் தன் திருமண வாழ்க்கைக்காக 8 நிபந்தனைகளை முன் வைக்கிறார். இந்த சூழலில் அந்த 8 நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் இளைஞனை அந்த பெண் கரம் பிடிக்கிறாள். அதன் பின் அந்த 8 நிபந்தனைகள் என்ன? அந்த நிபந்தனைகள் நிறைவேறியதா? என்பதே திரைக்கதை. விசு, எஸ்.வி.சேகர், அஸ்வின் சேகர், ஜெயஸ்ரீ, பூர்ணா, ஜெகன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். கதை, திரைக்கதையை எஸ்.வி.சேகர் எழுதியுள்ளார். வசனம் எழுதி படத்தை இயக்கியுள்ளார் மதன்குமார். ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

  கிடாரி படத்துக்குப் பிறகு சசிகுமார் நடித்துள்ள படம் - பலே வெள்ளையத் தேவா. அறிமுக இயக்குநர் சோலை பிரகாஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சங்கிலி முருகன், கோவை சரளா போன்றோர் நடித்துள்ளார்கள். தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai