சுடச்சுட

  
  vishal8999

   

  திரையரங்கத்துக்கு வருகிற ஆட்டோக்களைத் திரையரங்கின் உள்ளே நிறுத்த அனுமதிக்கவேண்டும் என்று நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  இதுகுறித்து அவர் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத்துக்கு எழுதிய கடிதத்தில் கூறியதாவது: வருகின்ற டிசம்பர் 23-ம் தேதி நான் நடித்த கத்தி சண்டை மற்றும் அதைத் தொடர்ந்து பல புதிய திரைப்படங்கள் வெளிவர இருக்கும் நிலையில் நான் உங்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள் வைக்கின்றேன். தற்பொழுது அனைத்து திரையரங்குகளிலும் ஆட்டோக்களுக்கு பார்க்கிங் செய்வற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

  இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது குடும்பதினர்களுடன் படம் பார்க்க வரும்பொழுது அவர்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். மேலும் பகல் வேலைகளிலும் ஆட்டோ சவாரிகள் இல்லாதபோதும் அவர்கள் படம் பார்பதற்குத் திரையரங்குகளுக்குதான் வருகின்றனர். இதனால் தியேட்டர் அதிபர்களுக்கு வருமானமே தவிர அவர்களால் நஷ்டம் ஒன்றும் இல்லை. 

  மேலும் ஆட்டோ தொழிலாளர்கள் ஒரு திரைப்படம் வெளியாவதற்கும் அத்திரைப்படம் வெற்றி பெறுவதற்கும் பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகின்றனர். ஆகவே இக்கடிதத்தின் வாயிலாக அனைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன், நமது திரைப்படம் வெற்றியடைவதற்குத் உறுதுணையாக உள்ள ஆட்டோக்களை பார்க்கிங் செய்வதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai