சுடச்சுட

    

    என் படத்தைவிடவும் டங்கல் சிறப்பு: அமீர் கானுக்கு சல்மான் கான் பாராட்டு!

    By DIN  |   Published on : 23rd December 2016 10:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dangal99xx

     

    அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - டங்கல். இன்று வெளியாகியுள்ளது.  

    இந்நிலையில், இதன் சிறப்புக்காட்சிகளைப் பார்த்த திரைப்பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பினரும் படத்தை ஆஹோஓஹோவென்று புகழ்ந்துவருகிறார்கள். சமூகவலைத்தளம் முழுக்க டங்கல் பாராட்டுகளைக் காணமுடிகிறது. படம் குறித்து நடிகர் சல்மான் கான் ட்விட்டரில் கூறியதாவது:

    இன்று மாலை எனது குடும்பத்தினர் டங்கல் படத்தைப் பார்த்தார்கள். (நான் நடித்த) சுல்தான் படத்தை விடவும் இப்படம் சிறப்பாக இருந்ததாகக் கூறினார்கள். தனிப்பட்ட முறையில் உங்களை மிகவும் விரும்புகிறேன் அமீர் கான். ஆனால் தொழில் ரீதியாக உங்களை வெறுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai