டங்கல்: சல்மான் கானுக்கு அமீர் கான் அழகான பதில்!
By DIN | Published on : 23rd December 2016 04:34 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

அமீர் கான், சாக்ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - டங்கல். இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இதன் சிறப்புக்காட்சிகளைப் பார்த்த திரைப்பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பினரும் படத்தை ஆஹோஓஹோவென்று புகழ்ந்துவருகிறார்கள். சமூகவலைத்தளம் முழுக்க டங்கல் பாராட்டுகளைக் காணமுடிகிறது. படம் குறித்து நடிகர் சல்மான் கான் ட்விட்டரில் கூறியதாவது:
இன்று மாலை எனது குடும்பத்தினர் டங்கல் படத்தைப் பார்த்தார்கள். (நான் நடித்த) சுல்தான் படத்தை விடவும் இப்படம் சிறப்பாக இருந்ததாகக் கூறினார்கள். தனிப்பட்ட முறையில் உங்களை மிகவும் விரும்புகிறேன் அமீர் கான். ஆனால் தொழில் ரீதியாக உங்களை வெறுக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதற்கு ட்விட்டரில் பதிலளித்த அமீர் கான் கூறியதாவது: சல்லு, உங்கள் வெறுப்பில் நான் அன்பையே காண்கிறேன். உங்களை வெறுப்பதுபோலவே விரும்பவும் செய்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.