சுடச்சுட

  

  மீண்டும் படம் இயக்குவது எப்போது? சசிகுமார் பளிச் பதில்!

  By DIN  |   Published on : 23rd December 2016 05:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  bale9888xx

   

  சுப்ரமணியபுரம், ஈசன் என இரு படங்களை மட்டும் இயக்கிவிட்டு இடைவெளி இல்லாமல் நடித்துக்கொண்டிருக்கிறார் சசிகுமார். மீண்டும் எப்போது படம் இயக்குவார்? அவர் அளிக்கும் பதில்:

  இதே கேள்வியை எல்லோரும் கேட்கிறார்கள். இந்த அழுத்தத்தினால் நான் மீண்டும் இயக்க ஆரம்பித்துவிடமாட்டேன். சரியான நேரம் வரும்போது நான் நிச்சயம் இயக்குவேன் என்று எனக்குத் தெரியும். மற்றவர்களுக்காக என்னால் படம் இயக்கமுடியாது. எப்போது இயக்கவேண்டும் என்று நானே முடிவுசெய்வேன். அந்தச் சரியான நேரத்துக்காகக் காத்திருக்கிறேன். அடுத்த வருடமாக இருக்கலாம். அதற்கடுத்த வருடமாகவும் இருக்கலாம். என்னிடம் இரு கதைகள் தயாராக உள்ளன. ஆனால் அதில் எதை இயக்கவேண்டும் என்று நான் முடிவுசெய்யவில்லை என்றார். 

  சசிகுமார் நடித்துள்ள பலே வெள்ளையத் தேவா இன்று வெளியாகியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai