சுடச்சுட

  

  விவாகரத்து கோரி ரஜினி மகள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

  By DIN  |   Published on : 23rd December 2016 11:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  soundarya_rajini9821

   

  ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா, கணவர் அஷ்வினுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விவாகரத்து கோரி குடும்பநல முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

  2010-ல் தொழிலதிபர் அஷ்வினைத் திருமணம் செய்தார் செளந்தர்யா ரஜினிகாந்த். இந்தத் தம்பதியருக்கு வேத் என்கிற மகன் உண்டு. 

  இந்நிலையில், செளந்தர்யா - அஷ்வின் இடையே கருத்துவேறுபாடு நிலவியதால் பிரிந்து வாழ்கிறார்கள். முதலில் ஊடகங்களில் இதுகுறித்து வெளியான தகவலை ட்விட்டரில் உறுதி செய்தார் செளந்தர்யா. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது: 

  என் திருமணம் தொடர்பான செய்திகள் உண்மைதான். கடந்த ஒருவருடமாக இருவரும் பிரிந்துவாழ்கிறோம். விவாகரத்து குறித்து பேசிவருகிறோம் என்று கூறினார்.  

  இதையடுத்து தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் செளந்தர்யா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai