சுடச்சுட

  
  Soundarya

  நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் அஸ்வின் ராம்குமார் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
  நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010 -ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கடந்தாண்டு "வேத்' என்ற ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து, திரைப்பட தயாரிப்பில் சௌந்தர்யா ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், அஸ்வின் -சௌந்தர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
  கடந்தாண்டு பிரசவத்துக்கு தாய் வீட்டுக்கு வந்த செளந்தர்யா அங்கேயே தங்கிவிட்டார். இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு என்று வெளியான தகவலை இரு தரப்பினரும் மறுத்து வந்தனர். சில மாதங்களுக்கு முன், சௌந்தர்யா தனது நிலையை சமூக வலைதளத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.
  இந்த நிலையில், இருவரும் பரஸ்பரம் பிரிவது என்று முடிவெடுத்ததால், விவாகரத்து கோரி சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்தனர். மேலும் நீதிபதி மேரி டில்டா முன்பு இருவரும் ஆஜராகி, தாங்கள் பரஸ்பரம் விவாகரத்து பெற விரும்புவதாக தெரிவித்தனர். இதை ஏற்ற நீதிபதி, மனு மீதான விசாரணையை 6 மாத காலத்துக்கு ஒத்தி வைத்தார்.
  இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தால் அதனை விசாரிக்க, மனு தாக்கல் செய்த காலத்தில் இருந்து குறைந்தது 6 மாத காலம் இடைவெளி இருக்க வேண்டும் என்பது சட்டம். இந்த காலத்தில், சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுக்கும்பட்சத்தில் தங்களது மனுவை அவர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai