சுடச்சுட

  

  பிரபுவின் பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சென்று வாழ்த்திய ரஜினி!

  By DIN  |   Published on : 25th December 2016 06:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  prabhu

   

  சென்னை: வரும் செவ்வாயன்று பிறந்தநாள் கொண்டாட உள்ள நடிகர் பிரபுவுக்கு , 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகனும், புகழ்பெற்ற நடிகருமான பிரபுவுக்கு வருகிற டிசம்பர் 27-ந் தேதி பிறந்தநாள். இந்த பிறந்தநாளில் அவருக்கு 60 வயது பூர்த்தி ஆகிறது.

  இந்நிலையில் பிரபுவின் பிறந்தநாளையொட்டி பிரபுவை அவரது அன்னை இல்லத்தில்  இன்று ரஜினி நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் பொழுது நடிகர் விக்ரம் பிரபு மற்றும் பிரபு குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உடனிருந்தனர்.

  ரஜினி நேரில் வந்து வாழ்த்தியது பிரபுவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

  தன்னுடைய பிறந்தநாளையொட்டி ரஜினி நேரில் வந்து வாழ்த்தியது பிரபுவை அவரது குடும்பத்தாரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai