சுடச்சுட

  
  sathriyan

   

  சென்னை: 'சுந்தரபாண்டியன்’ திரைப்பட இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'முடிசூடா மன்னன்' என்பதில் இருந்து 'சத்ரியன்' என்று மாற்றப்பட்டுள்ளது.

  சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில்நடிக்க விக்ரம் பிரபு ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. படத்திற்கான 'முடிசூடா மன்னன்' என்ற தலைப்பும் அறிவிக்கப்பட்டிருந்தது.

  இந்நிலையில் சமீபத்தில் இப்படத்திற்கு 'சத்ரியன்' என்று பெயர் மாற்றம் செய்யப்படப் போவதாக சமூக  வலைத்தளங்களில் அறிவிப்பு வெளியானது. இது பற்றி எந்த பதிலும் சொல்லாமலே இருந்து வந்த இயக்குனர்   தரப்பு தற்போது விளக்கம் கொடுத்துள்ளது. அதில், மாற்றப்பட்ட புதிய தலைப்பான 'சத்ரியன்' என்பதை புத்தாண்டு அன்று சொல்வதாக இருந்தோம். ஆனால், இதைப் பற்றி அறிந்த நண்பர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் இப்படத்தின் தலைப்பை வெளியிட்டு விட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சத்ரியன்’ என்ற தலைப்பில் மணிரத்னம் கதையில், மறைந்த இயக்குனர் சுபாஷ் இயக்கத்தில், விஜயகாந்த் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai