சுடச்சுட

  
  aamir_khan11

   

  டிசம்பரில் அமீர் கான் படம் வெளிவருகிறது என்றாலே சூப்பர் ஹிட் ஒன்று தயார் என அறிந்துகொள்ளலாம்.

  அந்தளவுக்கு டிசம்பருக்கும் அமீர் கானுக்கும் அப்படியொரு ராசி!

  தாரேஜமீன்பர், கஜினி, த்ரீ இடியட்ஸ், தூம் 3, பிகே என சமீபத்தில் டிசம்பரில் வெளியான அத்தனை அமீர் கான் படங்களும் வெற்றி மட்டும் பெறவில்லை. சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளன. அதேபோல இந்த வருடம் வெளியான டங்கலும் வெளியிட்ட இடங்களில் எல்லாம் வசூல் சாதனை செய்துவருகிறது. இதனால் டிசம்பரில் அமீர் கான் படம் ஒன்று வெளியானால் நிச்சயம் தோல்வியடையாது என்கிற ஒரு கருத்து பாலிவுட்டில் உருவாகியுள்ளது 

  சரி, அமீர் கானின் அடுத்தப் படமும் டிசம்பரில்தான் வெளிவருகிறதா?

  சேச்சே, அமீர் கான் போன்ற ஒரு திறமையாளர் ஒரேடியாக டிசம்பர் மாதத்தை மட்டும் நம்பியிருக்கமுடியுமா? அமீர் கான் தயாரித்து நடிக்கும் சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படம், அடுத்தவருடம் ஆகஸ்ட் 4-ம் தேதி வெளியாகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai