சுடச்சுட

  
  aamir_khan_six_pack

   

  அமீர் கான் படங்களில் ரூ. 100 கோடியைத் தாண்டிய 5-வது படம் - டங்கல். 2014-ல் வெளிவந்த பி.கே. படத்துக்குப் பிறகு அமீர் கானை மீண்டும் வசூல் மன்னனாக நிலைநிறுத்தியுள்ளது டங்கல்.  

  அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - டங்கல். கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று வெளியானது.   

  இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பினரும் படத்தை ஆஹோஓஹோவென்று புகழ்ந்துவருகிறார்கள். நாடு முழுக்க டங்கல் படத்துக்கு ஏகோபித்த பாராட்டுகள் கிடைத்துள்ளன. இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆக மொத்தம் உலகம் முழுக்க 5000-க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிநடைபோட்டு வருகிறது. 

  இந்நிலையில் இந்தியாவில், படத்தின் முதல் மூன்று நாள் வசூல் ரூ. 100 கோடியைத் தொட்டுள்ளது. வெள்ளியன்று ரூ. 30 கோடி, சனியன்று ரூ. 35 கோடி, ஞாயிறன்று ரூ. 42 கோடி என முதல் மூன்று நாள்களில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் சேர்த்து ரூ. 107 கோடி வசூலித்துள்ளது. 2-ம் நாள் 17% வசூல் அதிகம் கண்ட டங்கல், நேற்று 22% அதிகமாக வசூலித்துள்ளது. 

  முதல் மூன்று நாள்களில் ரூ. 100 கோடியைத் தொடுவதென்பது இந்தியத் திரையுலகில் பெரிய சாதனையாகும். எல்லாப் படங்களாலும் இதைச் சாதிக்கமுடியாது. வரும்நாள்களில் டங்கல் படத்தின் வசூல் மேலும் அதிகமாகி, பல சாதனைகளை உடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  ஹிந்தித் திரையுலகில் முதல்முதலாக ரூ. 100 கோடி வசூலைக் கண்டவர் அமீர் கான். 2008-ல் இவருடைய கஜினி படம் ரூ. 100 கோடியைத் தொட்டதுதான் மற்ற படங்களுக்குப் பெரிய முன்னுதாரணமாக அமைந்தது. இப்போது மீண்டுமொருமுறை  ரூ. 100 கோடி வசூலைக் கண்டு பாலிவுட் திரையுலகின் தன்னிகரற்ற நட்சத்திரமாக விளங்குகிறார் அமீர் கான். 

  அமீர் கானின் ரூ. 100 கோடி படங்கள்!  

  1. கஜினி (2008)
  2. த்ரீ இடியட்ஸ் (2009)
  3. தூம் 3 (2013)
  4. பி.கே. (2014)
  5. டங்கல் (2016)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai