சுடச்சுட

  

  தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் பிப்ரவரி 5-இல் நடைபெறவுள்ளது.
  2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய நிர்வாகத்துக்கான தேர்தல் பிப்ரவரி 5-இல் நடைபெறுகிறது.
  இதையொட்டி, ஜனவரி 4 முதல் 7-ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் வழங்கப்படுகின்றன. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 8-ஆம் தேதி முதல் 12 வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்கலாம். ஜனவரி 13 முதல் 18-ஆம் தேதி வரை மனுக்களை திரும்பப் பெறலாம். 18-இல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதையடுத்து, பிப்ரவரி 5-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
  தலைவர் பதவிக்கு ஒரு லட்சம் ரூபாயும், மற்ற நிர்வாக பதவிகளுக்கு 50 ஆயிரம் ரூபாயும், செயற்குழு உறுப்பினர்களுக்கு பதவிக்கு 10 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai