சுடச்சுட

    

    நான்கு நாள்களில் ரூ. 200 கோடி வசூல்: வசூலில் சிக்ஸர் அடிக்கும் டங்கல்!

    By DIN  |   Published on : 28th December 2016 12:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dangal99xx

     

    அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - டங்கல். கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று வெளியானது.   

    இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பினரும் படத்தை ஆஹோஓஹோவென்று புகழ்ந்துவருகிறார்கள். நாடு முழுக்க டங்கல் படத்துக்கு ஏகோபித்த பாராட்டுகள் கிடைத்துள்ளன. இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆக மொத்தம் உலகம் முழுக்க 5000-க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிநடைபோட்டு வருகிறது. 

    இந்நிலையில் இந்தியாவில் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் ரூ. 100 கோடியைத் தொட்டது. இந்நிலையில் உலகம் முழுக்க முதல் நான்கு நாள்களில் ரூ. 200 கோடி வசூலித்துள்ளது டங்கல். முதல் நான்கு நாள்களில் இந்தியாவில் ரூ. 132 கோடியும் வெளிநாடுகளில் ரூ. 76 கோடியும் அள்ளியுள்ளது. ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 208 கோடியை முதல் நான்கு நாள்களில் வசூலித்து மகத்தான சாதனை புரிந்துள்ளது.

    நேற்றுடன் இந்தியாவில் மட்டும் ரூ. 150 கோடியை அள்ளியிருக்கும் டங்கல், அடுத்தச் சில நாள்களில் இந்தியாவில் மட்டும் ரூ.200 கோடியைத் தொட்டுவிடும் நிலைமையில் உள்ளது. இதன் அடிப்படையில் வரும் வாரங்களில் பல சாதனைகளை இந்தப் படம் உடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai