சுடச்சுட

  

  ரித்திகா சிங்

  முதல் படத்திலேயே தேசிய விருது. இறுதிச்சுற்று படத்தில் நல்ல நடிகை என்று பெயர் வாங்கிய ரித்திகா சிங், அடுத்தப் படமான ஆண்டவன் கட்டளையில் அனைவருடைய மனங்களையும் கவர்ந்தார்.

  மடோனா செபாஸ்டியன்

  முதல் தமிழ்ப் படத்திலேயே விஜய் சேதுபதிக்கு ஜோடி. கனமான கதாபாத்திரத்தில் நடிப்புத் திறமை வெளிப்பட, இப்போது பெரிய படங்கள் இவர் வசம். கே.வி. ஆனந்த், தனுஷ் படங்களின்  நாயகிக்கு 2017-லிலும் நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. 

  பூஜா தேவரியா

  ஒரு புதுமுக நடிகை, நல்ல நடிகை என்று பெயர் பெறுவது கடினம்! ஆனால் பூஜா தேவரியாவால் இறைவி படத்தில் அந்தப் பெயரைப் பெறமுடிந்தது. குற்றமே தண்டனையிலும் தன் பெயரை நிலைநிறுத்தினார்.

  மஞ்சிமா மோகன்

  கெளதம் மேனன் படத்தின் கதாநாயகியாகும் அதிர்ஷ்டம் எல்லா நடிகைகளுக்கும் கிடைக்காது. மஞ்சிமாவுக்கு அந்த வாய்ப்பு, அச்சம் என்பது மடமையடாவில் கிடைத்தது. உடலமைப்பில் இன்னும் கவனம் கொண்டால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம்!

  சாட்னா டைடஸ்

  நடிகை சாட்னா டைடஸ், எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர், விஜய் ஆண்டனி நடித்து வெற்றி பெற்ற பிச்சைக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து கவனம் பெற்றவர். தமிழில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

  ரம்யா பாண்டியன்

  ஜோக்கர் படம் வருகிறவரை ரம்யா பாண்டியனை யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு நல்ல நோக்கமுள்ள படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் தமிழ்ப் பெண்ணான ரம்யா பாண்டியன். இதேபோல நல்ல கதாபாத்திரங்களில் இவரை எதிர்பார்க்கலாம். 

  நிவேதா பெத்துராஜ்

  தமிழ்ப் பெண். ட்விட்டர், ஃபேஸ்புக்கில் தமிழில் எல்லாம் பதிவுகள் எழுதுவார். ஒருநாள் ஒரு கூத்து படத்தில் நடித்து அடியே அழகே பாடலில் இடம்பெற்றது இவர் அதிர்ஷ்டம். அந்த ஒரு பாடல் இவருக்கு அதிக கவனம் கொடுத்துவிட்டது. 

  நிகிலா விமல்

  சசிகுமாருடன் 2 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் நிகிலா விமல். 2016 நல்ல ஆரம்பம் கொடுத்தாலும் இவர் எந்தளவுக்குத் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்பார் என்பது இனி வரும் வருடங்களில்தான் தெரியும். 

  அனுபமா பரமேஸ்வரன்

  பிரேமம் படம் மூலமாக அனைவரும் அறிந்த நடிகையின் முதல் தமிழ்ப் படம், தனுஷுடன். சொந்தக் குரலில் பேசி ஒரு கனவுடன் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai