சுடச்சுட

  

  மன்னவன் வந்தானடி: செல்வராகவன் - சந்தானம் இணையும் படத்தின் பெயர்!

  By எழில்  |   Published on : 29th December 2016 06:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  santhanam_(thillukku_dhuttu)

   

  இயக்குநர் செல்வராகவன் தற்போது இயக்கியுள்ள படத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். கெளதம் மேனன் தயாரிப்பில், நந்திதா, ரெஜினா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

  இதற்கு அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். 

  செல்வராகவன் - சந்தானம் கூட்டணி தமிழ்த் திரையுலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

  சந்தானம் கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளிவந்த தில்லுக்கு துட்டு, வசூல்ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக சர்வர் சுந்தரம் என்கிற படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இந்நிலையில் செல்வராகவன் படத்தின் கதாநாயகன் ஆகியுள்ளார். 

  இப்படத்துக்கு மன்னவன் வந்தானடி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai