சுடச்சுட

  

  அமீர் கானின் டங்கல்: முதல் வாரத்தில் ரூ. 300 கோடி வசூல்!

  By எழில்  |   Published on : 30th December 2016 03:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dangal1

   

  அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - டங்கல். கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று வெளியானது. இந்தப் படம் முதல் வாரத்தில் ரூ. 300 கோடியை வசூல் செய்துள்ளது.    

  நாடு முழுக்க டங்கல் படத்துக்கு ஏகோபித்த பாராட்டுகள் கிடைத்துள்ளன. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பினரும் படத்தை ஆஹோஓஹோவென்று புகழ்ந்துவருகிறார்கள். இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆக மொத்தம் உலகம் முழுக்க 5000-க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிநடைபோட்டு வருகிறது. 

  இந்நிலையில் முதல் வார இந்திய வசூலாக ரூ. 197 கோடியை அள்ளியுள்ளது. மேலும் வியாழன் வரை வெளிநாடுகளில் மட்டும் கிட்டத்தட்ட ரூ. 120 கோடி வசூல் கிடைத்துள்ளது. இதன்படி முதல் வாரம் மட்டும் உலகளவில் ரூ. 300 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது டங்கல் படம். 

  இன்றுடன் இந்திய அளவில் ரூ. 200 கோடி வசூலை அடைய உள்ளது. இதையடுத்து முதல் 10 நாள்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 250 கோடி வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் வரும் வாரங்களில் பல சாதனைகளை இந்தப் படம் உடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai