சுடச்சுட

  

  நடிகர் மாதவன் ஆக்கிரமித்த பாசன வாய்க்காலை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மீண்டும் மனு

  By DIN  |   Published on : 31st December 2016 10:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  madhavan

  நடிகர் மாதவன் ஆக்கிரமித்த பாசன வாய்க்காலை மீட்கக் கோரி ஆட்சியரிடம், பழனியைச் சேர்ந்த விவசாயிகள் வெள்ளிக்கிழமை மீண்டும் புகார் மனு அளித்தனர்.

  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், பாலசமுத்திரம் அடுத்துள்ள விலாங்கோம்பை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் டி.ஜி.வினயிடம் புகார் மனு அளித்தனர்.

  முன்னதாக கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: விலாங்கோம்பை அடுத்துள்ள தேக்கன்தோட்டம் பகுதியில் டிடிஎல் பாசன வாய்க்கால் உள்ளது. இதன் மூலம், 50 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இதனிடையே தேக்கன்தோட்டம் பகுதியில் 7 ஏக்கர் நிலம் வாங்கிய நடிகர் மாதன், 50 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் வரத்து கால்வாயை ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளார். மேலும், விளைபொருள்களை வைக்க பயன்படுத்தப்பட்டு வந்த களம் மற்றும் புறம்போக்கு நிலங்களையும் அவர் ஆக்கிரமித்துள்ளார்.

  இதுகுறித்து கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தோம். விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு விட்டதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து விட்டனர். தற்போது வரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட வில்லை. எனவே, பழனி வட்டத்துக்கு தொடர்பில்லாத அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடத்தி, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனை அடுத்து, கடந்த ஓராண்டுக்கு முன் வரை குளங்கள் மற்றும் நீராதாரங்கள் ஆக்கிரமிப்பு, வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு, குளம் தூர் வாருதல் தொடர்பாக நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், தேக்கன்தோட்டப் பிரச்னையில் வருவாய்த்துறை தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai