சுடச்சுட

  
  rahman212

   

  பைரவா படத்துக்குப் பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். 

  இதுகுறித்து படக்குழுவினர் தகவல் தெரிவித்ததாவது: அட்லி - விஜய் இணையும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. படத்துக்கு இசையமைக்க ரஹ்மான் ஒப்புக்கொண்டாலும் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. சிலநாள்களில் அவர் அதிகாரபூர்வமாக ஒப்புக்கொள்வார். இதன்பிறகு தயாரிப்பு நிறுவனம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும் என்று தகவல் தெரிவித்துள்ளார்கள்.

  இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து காஜல் அகர்வால், சமந்தா, ஜோதிகா போன்றோர் நடிக்கவுள்ளார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai