சுடச்சுட

  
  subash78xx

  சத்ரியன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கே. சுபாஷ் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 

  சிறுநீரகக் கோளாறு தொடர்பாக அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.   

  1988-ல் கலியுகம் படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் நுழைந்த சுபாஷ், உத்தம புருஷன், சத்ரியன், பிரம்மா, பங்காளி உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களை இயக்கினார். நாயகன் படத்தில் மணிரத்னத்தின் உதவியாளராக பணிபுரிந்தார். கடந்த சில வருடங்களாக பாலிவுட்டில் திரைக்கதையாசிரியாகப் பணியாற்றினார். சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, ஹவுஸ்ஃபுல் 3 போன்ற ஹிந்திப் படங்களின் கதை உருவாக்கத்தில் பணியாற்றியுள்ளார்.  

  சுபாஷின் மறைவுக்குத் திரையுலக கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai