முதல்நாளில் வசூல் மழை பொழிந்த ரெமோ படம்!

சிவகார்த்திகேயன் படங்களில் அதிக முதல்நாள் வசூல்...
முதல்நாளில் வசூல் மழை பொழிந்த ரெமோ படம்!

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆர்.டி. ராஜா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம், இசை - அனிருத். தணிக்கையில் ரெமோ படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

நேற்று வெளியான ரெமோ, வசூலில் சாதனை நிகழ்த்தி வருகிறது. முதல் நாளில் மட்டும் ரூ. 8 கோடி வரை வசூல் செய்துள்ளது. சிவகார்த்திகேயன் படங்களில் அதிக முதல்நாள் வசூல் கண்டது ரெமோதான். இந்த வருடம் வெளியான படங்களில் கபாலி, தெறி போல முதல் நாளன்று அதிக வசூலைக் கண்ட படங்களின் பட்டியலில் ரெமோவும் இடம்பிடித்துள்ளது. 6 நாள்கள் வரை விடுமுறை உள்ளதால் ரெமோ படத்தின் வசூல் அடுத்தடுத்த நாள்களில் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com