ரசிகர்களின் உற்சாகம் குறையவில்லை: நடிகர் ரஜினிகாந்த்

ரசிகர்களிடம் முன்பிருந்த உற்சாகம் இன்னும் குறையாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
வயதான பெண் ரசிகையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினிகாந்த்.
வயதான பெண் ரசிகையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினிகாந்த்.
Published on
Updated on
1 min read

ரசிகர்களிடம் முன்பிருந்த உற்சாகம் இன்னும் குறையாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நான்காவது நாளாக வியாழக்கிழமை தஞ்சாவூர், கடலூர், புதுவை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 600 ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மண்டபத்திற்கு வெளியே இருந்த செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசியது: ரசிகர்களிடம் முன்பிருந்த உற்சாகம் இன்னும் குறையாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களின் உற்சாகத்தைப் பார்க்கும்போது, எனக்கு வயதாகி விட்டதாகத் தோன்றுகிறது. அவர்கள் அதே உற்சாகத்துடன் இருக்கிறார்கள். இளந்தலைமுறை ரசிகர்களிடமும் அதே ஆர்வம் உள்ளது. ரசிகர்கள் என்னை சந்திப்பதும், நான் அவர்களைச் சந்திப்பதும் இன்ப அதிர்ச்சிதான்.
இவ்வளவு விரைவாக இந்த ரசிகர்கள் சந்திப்பு முடியப் போகிறது என்பதில் வருத்தம்தான். இன்னும் மீதமுள்ள 18 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை விரைவில் சந்திப்பேன். அதற்கான தேதிகள் அறிவிக்கப்படும்.
குடும்பம், உடலுக்கு முதலிடம்: ரசிகர்கள் அனைவரும் குடும்பம், உடலுக்கு முதலிடம் கொடுக்க கேட்டுக் கொள்கிறேன். மது, புகை உள்ளிட்ட கெட்ட பழக்கங்களை விட்டு விட்டு ஒழுக்கமாக வாழ வேண்டும் என்பது ரசிகர்களுக்கு எப்போதும் நான் சொல்லும் அறிவுரை என்றார் ரஜினிகாந்த். அரசியல் பயணம் தொடங்குவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நோ கமெண்ட்ஸ் என்றார் ரஜினிகாந்த்.
இன்று கடைசி நாள்: நடிகர் ரஜினிகாந்துடன் ரசிகர்கள் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (மே.19) முடிவடைகிறது. இரண்டாம் கட்டமாக ஜூன் மாத மத்தியில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களைச் சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com